Monday, September 22, 2014

கோதுமை பிரியாணி

Photo: கோதுமை பிரியாணி

தேவையான பொருட்கள்
கோதுமை ரவை- 1/2 கிலோ
பீன்ஸ்- 100 கிராம்
காலிபிளவர்- 1 /2 கிலோ
பச்சை பட்டாணி - 1/2 கிலோ
பச்சை மொச்சை -100 கிராம்
கத்தரிக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய்- 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு -10 பல்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் -3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் -1 (சாறு எடுக்கவும்)
பட்டை - 2 சிறுதுண்டு
லவங்கம் - 2
புதின இலை - சிறுகட்டு
எண்ணெய் -1/2 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நீர் - இரு பங்கு

செய்முறை

பச்சை மொச்சையை உரித்துக் கொள்ளவும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் விழுதாக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது, புதினா இலை சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக விடவும்.
மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.
அத்துடன் ரவையைப் போல் இருமடங்கு நீர் ஊற்றி கொதித்ததும், ரவையைச் சேர்த்து உப்பு சரி பார்த்து வேக விடவும்.
குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து இறக்கவும்.

காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.

Photo: ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும். நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். "நொறுங்கத் தின்று நூறு வயதிரு" என்பது மூதுரையார் வாக்கு. உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.

ஓட்ஸ் இட்லி

Photo: ஓட்ஸ் இட்லி

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/4 கப்உளுத்தம் பருப்பு - 1 கப்உப்பு - தேவையான அளவுநறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவுதண்ணீர் - 1 1/2 கப்தாளிப்பதற்கு...கடுகு - 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் மிக்ஸியில் ஓட்ஸ் மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு, நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு, அத்துடன் உப்பு, பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்பு அதனை மூடி வைத்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அந்த மாவில் ஊற்றி கிளறி விட வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வேண்டும். நீரானது கொதிப்பதற்குள், இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி மாவை ஊற்றிக் கொள்ள வேண்டும்.இறுதியில் இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதற்குள் இட்லி தட்டை வைத்து, மூடி வைத்து 8-10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஓட்ஸ் இட்லி ரெடி

பாசி பருப்பு இட்லி

சுவையான,சத்தான பாசிபருப்பு இட்லி.

Photo: பாசி பருப்பு இட்லி

தேவையான பொருட்கள் :

பாசி பருப்பு - 1 கப்
புளுங்கல் அரிசி - அரை கப்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* பாசி பருப்பு, அரிசி, உளுத்தம் பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவை உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.

* பின்னர் மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான, சத்தான பாசி பருப்பு இட்லி ரெடி

தேவையான பொருட்கள் :

பாசி பருப்பு - 1 கப்
புளுங்கல் அரிசி - அரை கப்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* பாசி பருப்பு, அரிசி, உளுத்தம் பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவை உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.

* பின்னர் மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான, சத்தான பாசி பருப்பு இட்லி ரெடி.
கம்பு தயிர் சாதம்

சுவையான கம்பு தயிர் சாதம்!!!

Photo: கம்பு தயிர் சாதம்

தேவையான பொருட்கள்:

கம்பு - 1/2 கப்
தண்ணீர் - 4 கப்
புளிக்காத தயிர் - 1 கப்
கேரட் -1
மாங்காய் - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு :

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/4 இன்ச்

செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை, மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• இஞ்சிசை துருவிக் கொள்ளவும்.

• கம்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

• தண்ணீர் அதிகம் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

• பின்பு அத்துடன் தயிர், பின் கேரட், கொத்தமல்லி, மாங்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை,பச்சை மிளகாய், இஞ்சி போட்டு தாளித்து, கம்புடன் சேர்த்து கிளறவும்.

•  சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி!!!

Saturday, September 20, 2014

தினை லட்டு

தேவையானவை: சுத்தம் செய்த தினை - ஓர் ஆழாக்கு, தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தேன் - 4 டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு கட்டி (அல்லது தேவையான அளவு), நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெறும் சட்டியில் தினையை வறுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கவும். ஆறியதும், மிக்ஸியில் தூளாகப் பொடிக்கவும். கொடுத்துள்ள அனைத்தையும் தினை மாவுடன் கலந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.

QmNRpdl.jpg

மருத்துவப் பலன்கள்புரதச் சத்து நிரம்பியது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள் செறிந்தது. தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

சுக்கு மல்லி காபி

தேவையானவை: மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.

செய்முறை: எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்

.

l5JGfI6.jpg

மருத்துவப் பலன்கள்: உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம். 

பிரண்டைத் துவையல்

தேவையானவை: நறுக்கிய இளசான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு, இளசான கறிவேப்பிலை - கைப்பிடி, நல்லெண்ணெய் - கால் குழிக்கரண்டி.

செய்முறை: இரும்புக்கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், பிரண்டையைப் போட்டு, நன்றாக வதக்கவும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாகப் போட்டு, சிவப்பாகும் வரை வறுக்கவும். அதிலேயே, மீண்டும் பிரண்டையைப் போட்டு,  அம்மியில் மசிய அரைக்கவும். சூடான சாதத்தில், துவையலைப் போட்டுக் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

Si5BkKX.jpg

குறிப்பு: பிரண்டை நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும். முற்றலாக இருந்தால் நாக்கு அரிக்கும். சக்கை சக்கையாக இருக்கும்.

மருத்துவப் பலன்கள்: எலும்பு முறிவு வைத்தியத்துக்கு, பிரண்டை நல்லது. மூலநோய், ஆஸ்துமா, பசியின்மை, அஜீரணம், இருமல் பிரச்னை இருந்தால் பிரண்டையை சமையலில் சேர்க்கலாம்.

நவதானிய அடை

தேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு.

இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

urCeMaL.jpg

செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.
இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்... அருமையாக இருக்கும்.

மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்து மிக்க உணவு. எடை கூடுவதைத் தடுக்கும்.

பொரிவிளங்காய் உருண்டை

தேவையானவை: பாசிப்பயறு - ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் - தலா கால் ஆழாக்கு, வெல்லம் - அரை ஆழாக்கு, ஏலத்தூள் - ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

rkwoxf8.jpg

மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.